கணவர் கண் எதிரே பரிதாபம்: லாரி மோதி இளம்பெண் பலி
ஆவடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
பூந்தமல்லி.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், முத்தமிழ் நகர், காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 25). இவருடைய மனைவி சியாமளா (25). இருவரும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் ஆவடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த சியாமளா, அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கணவரின் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். ஜனார்த்தனன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மது (45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story