நாகையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


நாகையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 16 April 2021 7:46 PM IST (Updated: 16 April 2021 7:46 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் முககவசம் அணியாமல் வருவோருக்கு ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று நாகையில் முககவசம் அணியால் சாலையில் வாகனங்களில் சென்றவர்களுக்கு வருவாய்த்துறையினர் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உதவியுடன் பஸ்களை நிறுத்தி முககவசம் அணியாமல் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் ஆகியோருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். இதைப்போல நாகை மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் அதிரடியாக பஸ்களை ஆய்வு செய்து பயணிகளுக்கு அபராதம் விதிக்க தொடங்கியுள்ளனர். மேலும் முக கவசங்களை சரியான முறையில் முகத்தில் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். 

Next Story