திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு


திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு
x
தினத்தந்தி 16 April 2021 8:13 PM IST (Updated: 16 April 2021 8:13 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 150 மையங்களில் பிளஸ்-2 செய்முறை தேர்வு நடைபெற்றது.

திண்டுக்கல்:
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) நடைபெற இருக்கிறது. அதேநேரம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தேர்வை தள்ளி வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இதற்கிடையே பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் நேற்று தொடங்கின. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 252 பள்ளிகளில் பயிலும் 21 ஆயிரத்து 200 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ளனர்.
இதையொட்டி மாவட்டம் முழுவதும் செய்முறை தேர்வுக்காக 150 மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் முதல்கட்டமாக நத்தம், வடமதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 73 மையங்களில் நேற்று செய்முறை தொடங்கியது. இந்த மையங்களில் வருகிற 20-ந்தேதி வரை தேர்வு நடக்கிறது. இதில் நத்தம் தாலுகா செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செய்முறை தேர்வில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இதையொட்டி மாணவ-மாணவிகள் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்பட்டது. மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய ஆய்வக பொருட்களை தொடுவதற்கு மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே 2-வது கட்டமாக 77 மையங்களில் வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை செய்முறை தேர்வு நடக்கிறது. மேலும் கொரோனா பாதித்த மாணவர்களுக்கு மற்றொரு நாளில் செய்முறை தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

Next Story