ஆரணியில் சிறுமியை சில்மிஷம் செய்த வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்


ஆரணியில் சிறுமியை சில்மிஷம் செய்த வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 16 April 2021 10:20 PM IST (Updated: 16 April 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் சிறுமியை சில்மிஷம் செய்த வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்.

ஆரணி,

ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2015-ம் ஆண்டு ஆரணி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன்கள் மணிகண்டன் (வயது 19), அவருடைய தம்பி ஆகிய இருவரும் கேலி கிண்டல் மற்றும் சில்மிஷம் செய்து போலீசில் சொன்னால் ஒழித்து விடுவேன் என மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இது குறித்து சிறுமி ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப்போதைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.

மேலும் இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மணிகண்டனின் தம்பி ஆரணி அரசு மருத்துமனையில் 3 மாதங்கள் தூய்மை பணி செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று  திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் மணிகண்டனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.எம்.வசந்தி தீர்ப்பு வழங்கினார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கஉத்தரவிடப்பட்டது.

Next Story