நாகையில், கொரோனாவுக்கு 3 பேர் பலி டெல்டாவில், ஒரே நாளில் 425 பேருக்கு தொற்று


நாகையில், கொரோனாவுக்கு 3 பேர் பலி டெல்டாவில், ஒரே நாளில் 425 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 16 April 2021 10:54 PM IST (Updated: 16 April 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

நாகையில், கொரோனாவுக்கு 3 பேர் பலியானார்கள். டெல்டாவில், ஒரே நாளில் 425 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 109 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 787 ஆக உயர்ந்தது. தற்போது 1199 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 282 பேர் பலியாகி உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 51 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 245 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் இதுவரை 117 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 769 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாகையில், 3 பேர் பலி

நாகை மாவட்டத்தில் நேற்று 134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 83 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 717 ஆக உயர்ந்தது. தற்போது 1153 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 72, 68 வயது ஆண், 61 வயது பெண் ஆகியோர் பலியானார்கள். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பலி எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.டெல்டாவில், ஒரே நாளில் 425 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 243 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

Next Story