வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் அறை ஒதுக்ககோரி அ.தி.மு.க.வினர் கலெக்டரிடம் மனு


வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் அறை ஒதுக்ககோரி அ.தி.மு.க.வினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 16 April 2021 6:07 PM GMT (Updated: 16 April 2021 6:07 PM GMT)

வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் அறை ஒதுக்ககோரி அ.தி.மு.க.வினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கரூர்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 
கடந்த 6-ந்தேதி நடந்து முடிந்த கரூர் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. மே 2-ந்தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது 77 வேட்பாளர்களின் வாக்குகள் எண்ணுவதற்கு 2 அறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 2 அறைகளில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு போதிய இடம் இருக்காது. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளதால் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு கூடுதலாக ஒரு அறை ஒதுக்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும், என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story