களக்காடு பகுதியில் கணவன்-மனைவி உள்பட 11 பேருக்கு கொரோனா


களக்காடு பகுதியில்  கணவன்-மனைவி உள்பட 11 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 April 2021 7:04 PM GMT (Updated: 16 April 2021 7:04 PM GMT)

களக்காடு பகுதியில் கணவன்-மனைவி உள்பட 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

களக்காடு:

களக்காடு ஜவஹர் வீதியை சேர்ந்த கணவன்-மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அதேபோல் படலையார்குளம் மேற்கு தெருவில் 25 வயது பெண், 62 வயது ஆண், 43 வயது ஆண், புலியூர்குறிச்சியை சேர்ந்த 43 வயது ஆண், சாலைப்புதூரை சேர்ந்த 43 வயது ஆண், நம்பிதலைவன் பட்டயத்தை சேர்ந்த 76 வயது முதியவர், கீழப்பத்தையை சேர்ந்த 34 வயது இளைஞர், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணைக்கு செல்லும் பகுதியைச் சேர்ந்த 56 வயது ஆண், 26 வயது பெண் ஆகிய 11 பேருக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தங்களை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

Next Story