இலுப்பூரில் லாரி மின் கம்பத்தில் மோதி விபத்து


இலுப்பூரில் லாரி மின் கம்பத்தில் மோதி விபத்து
x
தினத்தந்தி 16 April 2021 7:20 PM GMT (Updated: 16 April 2021 7:20 PM GMT)

லாரி மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டம், பசனகால் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் மகன் பாரதிராஜா (வயது 22) இவர் லாரியில் காங்கேயத்தில் இருந்து ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை சாலையில் இலுப்பூர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் ஒன்று உடைந்து லாரியில் சிக்கிக்கொண்டது இதனையடுத்து உடடியாக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற இலுப்பூர் போலீசார் டிரைவர் பாரதிராஜாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் அப்பகுதியில் மின்சாரம் தடைபெற்றது. பின்னர் மின்சார வாரிய ஊழியர்கள் மின்கம்பியினை சரி செய்தனர்.

Next Story