ஸ்ரீபெரும்புதூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு


ஸ்ரீபெரும்புதூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 19 April 2021 5:10 PM IST (Updated: 19 April 2021 5:10 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூரில் கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த குன்னம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 32). இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். 

நேற்று முன்தினம் தினேஷ் ஸ்ரீபெரும்புதூர் காந்தி ரோட்டில் உள்ள வங்கியில் இருந்து ரூ. 3 லட்சத்தை எடுத்து கொண்டு காரில் சென்றார். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் காரை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். தினேஷ் திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து தினேஷ் 
ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
1 More update

Next Story