உடன்குடியில் கிருமிநாசினி தெளிப்பு


உடன்குடியில் கிருமிநாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 19 April 2021 5:31 PM IST (Updated: 19 April 2021 5:31 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

 உடன்குடி:
உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பாபு உத்தரவின் பேரில்,  உடன்குடி நகர பகுதியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள், ஏ.டி.எம்.கள், தினசரி மார்க்கெட், பஸ் நிலையம், ஆட்டோ ஸ்டாண்டு உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் தினமும் காலையிலும் மாலையிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
1 More update

Next Story