உர விலையை குறைக்கக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


உர விலையை குறைக்கக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 April 2021 4:40 PM GMT (Updated: 2021-04-19T22:10:14+05:30)

உர விலையை குறைக்கக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை

உர விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு ஊர்களில் விலசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் உர மூட்டையை உடலில் கட்டிக் கொண்டு கையில் போலி ரூபாய் நோட்டுகளை வைத்து கோஷமிட்டனர்.

தனியார் உற்பத்தியாளர்களிடம் நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்து அரசு திட்டத்திற்கு வழங்க மத்திய, மாநில அரசுகள் மானிய தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குகிறது. அதேபோன்று உரத்திற்கும் வழங்க வேண்டும். தற்போது உலக அளவில் பாஸ்பேட், கந்தகம், பொட்டாஷ் விலை உயர்ந்து உள்ள நிலையில் தனியார் உர நிறுவனம் உரத்தின் விலையை உயர்த்தி உள்ளது. 

எனவே மத்திய அரசு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கி உர விலையை குறைந்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். தற்போது உரச் செலவு ஏக்கருக்கு ரூ.1,500 என உயர்ந்து உள்ளதால் 8 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கிசான் நிதி ரூ.2 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story