சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி

சங்கராபுரம் அருகே  மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 19 April 2021 4:59 PM GMT (Updated: 2021-04-19T22:29:46+05:30)

சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம் மகன் சதீஷ்குமார் (வயது 24). என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் தற்போது அவரது தந்தைக்கு துணையாக விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கிடங்கன்பாண்டலத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்று கொண்டிருந்தார். குளத்தூர் ஏரி அருகே வந்தபோது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story