பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி போலீசார் விழிப்புணர்வு


பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி போலீசார் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 19 April 2021 10:43 PM IST (Updated: 19 April 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் பகுதியில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொள்ளாச்சி

கோட்டூர் பகுதியில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முகக்கவசம்

கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிதாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில் வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி அருகே கோட்டூர் போலீசார் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

குமரன் கட்டம், சங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பஸ்சில் ஏறி பயணிகளிடம் முகக்கவசம் அணிவது குறித்து போலீசார் விளக்கம் அளித்தனர்.

 மேலும் முகக்கவசம் அணியாமல் சென்ற பயணிகள், நடந்து சென்ற பொதுமக்களுக்கு போலீசார் இலவசமாக முகக்கவசம் வழங்கினர். 

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

பாதுகாப்பு வழிமுறைகள்

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தப்படுத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். 

முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும் போலீஸ் நிலையத்திற்குள் முகக்கவசம் அணியாமல் வரும் நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Next Story