கத்தியால் ஒருவரையொருவர் குத்தியதில் லாரி டிரைவர் சாவு

காரைக்குடியில் கத்தியால் ஒருவரையொருவர் குத்தியதில் லாரி டிரைவர் உயிரிழந்தார். மீன் வியாபாரி காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை போலீசார் கைது செய்தனர்..
காரைக்குடி,
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரத்த வெள்ளத்தில்...
இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். சம்பவம் நடந்த இடத்தில் கத்தி, மோட்டார் சைக்கிள், ஒரு ஜோடி செருப்பு கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றி கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினார்கள்.
லாரி டிரைவர்
இதையடுத்து சிவகங்கை சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முத்துமணியிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட திருச்செல்வத்தின் உறவினர் ஒருவர் காரைக்குடி வாரச்சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். முத்துமணியும் அந்த வாரச்சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு இருந்து உள்ளது.
கத்தியால் குத்தி கொலை
இதில் ஆத்திரம் அடைந்த திருச்செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முத்துமணியை குத்தி உள்ளார். பின்னர் அந்த கத்தியை பறித்து கொண்டு திருச்செல்வத்தை சரமாரியாக முத்துமணி குத்தி கொலை செய்து உள்ளார். அதன்பிறகு அங்கிருந்து காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பொய்யான காரணங்களை கூறி சிகிச்சை பெற்ற முத்துமணி மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து முத்துமணியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story