இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 20 April 2021 12:36 AM IST (Updated: 20 April 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை.

நாமக்கல்,

நாமக்கல் முதலைப்பட்டியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (வயது 30). இவரது மனைவி கீர்த்தனா (25). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதனால் கீர்த்தனா விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை 11 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த கீர்த்தனா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை பழனிசாமி நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இறந்து போன கீர்த்தனாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், அவரது இறப்புக்கான காரணம் குறித்து நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைக்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார்.
========
1 More update

Next Story