கொரோனா 2-வது அலை எதிரொலி: கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை


கொரோனா 2-வது அலை எதிரொலி: கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை
x
தினத்தந்தி 19 April 2021 7:08 PM GMT (Updated: 19 April 2021 7:10 PM GMT)

கொரோனா 2-வது அலை எதிரொலி: கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாதலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கொல்லிமலைக்கு செல்ல அடிவார பகுதியான காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். கொண்டை ஊசி வளைவு பகுதியில் இருபுறமும் பரந்து விரிந்து பசுமை நிறைந்த பகுதிகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுப்பதால் நாள்தோறும் அங்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து  வருகிறது.
இந்தநிலையில் கொரோனா 2-வது அலை அதிகளவில் பரவி வருகிறது. இதனால் மலைப்பகுதியில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்லிமலையில் முக்கிய சுற்றுலா பகுதியாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. சுமார் 300 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி கொட்டியது போல் விழும் இந்த நீர்வீழ்ச்சியை காண்பது மனதுக்குள் பரவசத்தை ஏற்படுத்தும். கொரோனா பரவலை தடுக்க ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும்வரை தடை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Next Story