சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளல்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளல்
x
தினத்தந்தி 19 April 2021 8:42 PM GMT (Updated: 2021-04-20T02:12:34+05:30)

சமயபுரத்தில் அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

சமயபுரம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேர்த்திருவிழா  விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக திருவிழா மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் கடந்த 11-ந் தேதி தேர்த்திருவிழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. நேற்று அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற வேண்டிய விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அரசின் உத்தரவுப்படி நடைபெறாது. ஆனால் இன்று காலை 10.30 மணிக்குமேல் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட சிறிய அளவிலான சப்பரத்தில் எழுந்தருளி கோவிலின் உள்பிரகாரமான இரண்டாம் பிரகாரத்தை வலம் வருகிறார். 


Next Story