உத்திரமேரூர் பாலாற்றுப் படுகையில் மணல் கடத்தல்; 2 பேர் கைது

x
தினத்தந்தி 20 April 2021 4:06 PM IST (Updated: 20 April 2021 4:06 PM IST)
உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் பாலாற்றுப் படுகையில் மணல் திருட்டு நடைபெறுவதாக சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், நேற்று அதிகாலை அங்கு ரகசியமாக கண்காணித்தனர்.அப்போது அங்கு 2 லாரிகளில் மணல் கடத்தி கொண்டிருந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் லாரிகளையும் இரண்டு பேரையும் சாலவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் இருவரும் சென்னை திரிசூலத்தை சேர்ந்த முருகன் (வயது 38),சுரேந்தர் (20) என தெரிந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





