நெமிலி அரசு பெண்கள் பள்ளியில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணிபுரிந்த ஆசிரியை பணி இடைநீக்கம்

நெமிலி அரசு பெண்கள் பள்ளியில்  போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணிபுரிந்த ஆசிரியை பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 20 April 2021 1:34 PM GMT (Updated: 2021-04-20T19:04:17+05:30)

நெமிலி அரசு பெண்கள் பள்ளியில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணிபுரிந்த ஆசிரியை பணி இடைநீக்கம்

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சுமதி. இவர் தனது பிளஸ்-2 வகுப்பு மதிப்பெண் பட்டியலை போலியாக கொடுத்து நெமிலியை அடுத்த கீழ்வீதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நெமிலி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவரின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய, அரசுத் தேர்வுத்துறைக்கு அனுப்பியதில் அவை போலியானது என்பதும், அவை அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆசிரியை சுமதியை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உத்தரவிட்டார். 

மேலும் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story