இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
x
இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
தினத்தந்தி 20 April 2021 4:11 PM GMT (Updated: 2021-04-20T21:41:10+05:30)

இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

கோவை

கோவை பீளமேடு என்.ஜி.ஆர் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 21). தனியார் நிறுவன ஊழியர். இவர், சரவணம்பட்டியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்து உள்ளார். 


இதை அறிந்த அந்த பெண்ணின் தாய், பன்னீர் செல்வத்தின் நடவடிக்கை குறித்து விசாரித்து உள்ளார். பின்னர் அவர், பன்னீர்செல்வத்திடம் தனது மகளை பின் தொடர வேண்டாம் என எச்சரித்துள்ளார். மேலும் அந்த இளம்பெண்ணும் பன்னீர்செல்வத்திடம் பேசுவதை நிறுத்தி உள்ளார்.


இந்தநிலையில் சென்னைக்கு வேலைக்கு சென்ற பன்னீர்செல்வம்,கடந்த சில நாட்களுக்கு முன்பு  கோவை வந்தார். 

அவர், நீலிகோணம்பாளையம் பகுதியில் நடந்து சென்று இளம்பெண் வழிமறித்து தன்னிடம் பேசா விட்டால், நாம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.


இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பன்னீர்செல்வம், அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இது குறித்து அந்த அந்த இளம் பெண்ணின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். 

Next Story