வைகை அணை பூங்கா மூடப்பட்டது

கொரோனா 2-வது அலை எதிரொலியை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை பூங்கா மூடப்பட்டது.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
இந்த பூங்கா வலதுகரை பூங்கா மற்றும் இடதுகரை பூங்கா என பிரிக்கப்பட்டு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது.
இங்கு தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் சுற்றுலா தலங்களை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி வைகை அணை பூங்காவும் நேற்று காலை மூடப்பட்டது.
பூங்கா பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளை போலீசாரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் திருப்பி அனுப்பினர்.
வைகை அணை பகுதியில் பூங்கா மூடப்பட்டதற்கான அறிவிப்பு பேனர்கள் வைக்கப்பட்டது.
இதனால் வைகை பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.
சுற்றுலா பயணிகளை நம்பி பூங்கா பகுதியில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story