கொரோனா 2-வது அலை எதிரொலி சித்தன்னவாசல் சுற்றுலா தலம் மூடப்பட்டது

சித்தன்னவாசல் சுற்றுலா தலம் மூடப்பட்டது
அன்னவாசல்:
கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் சித்தன்னவாசல் சுற்றுலா தலம் நேற்று முதல் மூடப்பட்டது. தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் ஏப்ரல் 20-ந்தேதி முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்து இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற சித்தன்னவாசல் சுற்றுலா தலம் நேற்று மூடப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை, பண்டிகை தினம் மட்டுமின்றி தினமும் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் பூங்கா, படகு குளம், சமணர் படுக்கை, குகை ஓவியங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் நிறைந்து காணப்படும் சித்தன்னவாசல் சுற்றுலா தலம் தற்சமயம் கொரோனா வைரஸ் அச்சுருத்தல் எதிரொலியாக மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story