செம்மஞ்சேரி அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
மேடவாக்கத்தை அடுத்த பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்தி. இவர் தனக்கு சொந்தமான காரில் மேலும் 3 பேருடன் நேற்று மாலை 4 மணியளவில் நூக்கம்பாளையம்-செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
சோழிங்கநல்லூர்,
மேடவாக்கத்தை அடுத்த பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்தி. இவர் தனக்கு சொந்தமான காரில் மேலும் 3 பேருடன் நேற்று மாலை 4 மணியளவில் நூக்கம்பாளையம்-செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வருவதை கண்டு காரை உடனடியாக சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் கார் முழுமையாக எரிந்தது.
காரில் வந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள் ஒன்று சேர்ந்து தீயை அணைக்க முற்பட்டனர். தகவலறிந்த சிறுசேரி தீயணைப்புத்துறை அதிகாரி மோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
நல்லவேளையாக காரில் இருந்து அனைவரும் உடனடியாக கீழே இறங்கியதால் அவர்கள் உயிர் தப்பினர். சாலையில் வந்த கார் திடீரென தீப்பற்றிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்துக்கான காரணம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story