காஞ்சீபுரம் காளிகாம்பாள் கோவில் உண்டியல் வசூல் ரூ.4½ லட்சம்
காஞ்சீபுரம் காளிகாம்பாள் கோவில் உண்டியல் வசூல் ரூ.4½ லட்சம் கிடைத்தது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தில் புகழ் பெற்ற ஆதிபீடா பரமேஸ்வரி மற்றும் காளிகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்களில் வசூலான காணிக்கை ஒரு ஆண்டுக்கு பின்னர் கோவில் செயல் அலுவலர் ஆ.குமரன், கோவில் அறங்காவலர் ஏழுமலை, ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் முன்னிலையில் எண்ணப்பட்டது.
இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் ரூ.4 லட்சத்து 56 ஆயிரத்து 97 மற்றும் 99 கிராம் தங்கம், 230 கிராம் வெள்ளி கிடைத்தது.
அப்போது எழுத்தர்கள் மணிகண்டன், லலிதா, முன்னாள் அறங்காவலர் செந்தில்குமார் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story