காஞ்சீபுரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கடைகளில் குவிந்த பொதுமக்கள் - 11 கடைகளுக்கு அபராதம்


காஞ்சீபுரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கடைகளில் குவிந்த பொதுமக்கள் - 11 கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 23 April 2021 7:27 PM IST (Updated: 23 April 2021 7:27 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

காஞ்சீபுரம், 

பட்டு நகரம் என்ற பெருமைக்குரிய காஞ்சீபுரத்தில் உள்ள கடைகளில் பட்டு சேலை வாங்க தினந்தோறும் ஏராளமானோர் வருகை தருவது வழக்கம்.

காஞ்சீபுரம் காந்தி சாலையில் உள்ள ஏராளமான பட்டு சேலை கடைகள் மற்றும் உணவகங்களில் கொரோனா அச்சுறுத்தல் பயமின்றி சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முககவசம் அணியாமலும் ஏராளமானோர் நேற்று திரண்டிருந்தனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் காஞ்சீபுரம் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி மற்றும் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் திடீரென காந்தி சாலையில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

சமூக இடைவெளியை பின்பற்றாதது, முககவசம் அணியாதது குறித்து கடையின் உரிமையாளர்களிடம் கேள்வி எழுப்பியதுடன் 11 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.55 ஆயிரம் அபராதம்் வசூலிக்கப்பட்டது.

கடைகளின் உரிமையாளர்கள் அரசு வழிகாட்டுதலின் பேரில் கொரோனா தொற்றுக்கான விதிமுறைகளை முறையாக கடைபிடித்து கடைகளை நடத்துமாறு ஆணையாளர் மகேஸ்வரி கேட்டுக்கொண்டார்.

Next Story