கொரோனா இருக்குமோ என்ற பயத்தில் தொழிலாளி தற்கொலை
தினத்தந்தி 24 April 2021 6:23 AM IST (Updated: 24 April 2021 6:23 AM IST)
Text Sizeசென்னையை அடுத்த ஆதம்பாக்கம், கொரோனா இருக்குமோ என்ற பயத்தில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் சாஸ்திரி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 43). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கோமதி. லோகநாதனுக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல், இருமல் இருந்துள்ளது.
எனவே தனக்கு கொரோனா தொற்றாக இருக்குமோ? என பயந்த லோகநாதன், விரக்தியில் இருந்து வந்தார்.
நேற்று அதிகாலை லோகநாதன் திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire