நடிகர் விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்


நடிகர் விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்
x
தினத்தந்தி 28 April 2021 6:54 AM IST (Updated: 28 April 2021 6:54 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்.

சென்னை, 

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த விவேக்குக்கு கடந்த 16-ந் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர், விவேக்கை மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி கடந்த 17-ந் தேதி அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

அப்போது விவேக் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சென்னை சாலிகிராமம், பத்மாவதி நகரில் உள்ள நடிகர் விவேக் வீட்டுக்கு, மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Next Story