வீட்டு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை
வீட்டு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை குடும்பத்துடன் கொரோனா மையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என மாநகராட்சி எச்சரிக்கை.
சென்னை,
கொரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும் போது, அவரின் வீட்டில் உள்ள அனைவரும் குறிப்பிட்ட காலத்திற்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியே சுற்றித்திரிவதாகவும், இது கண்டிக்கத்தக்கது என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்போர், அரசு உத்தரவை மீறி வெளியே சுற்றுவது தெரியவந்தால், அவர்கள் கொரோனா பராமரிப்பு மையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினரும் தனியார் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
Related Tags :
Next Story