சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 315 தெருக்களில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 315 தெருக்களில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு.
சென்னை,
கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளதால், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களும், ஒரே பகுதியில் இருப்பவர்களும் அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அந்தவகையில் ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சென்னையில் 315 தெருக்களில் 10 பேருக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 63 தெருக்களிலும், குறைந்தப்பட்சமாக திருவொற்றியூர் மண்டலத்தில் ஒரு தெருவிலும் 10-க்கு மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 895 தெருக்களில் 6-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story