மாவட்ட செய்திகள்

பழிக்கு பழியாக கார் டிரைவர் வெட்டிக்கொலை + "||" + Revenge car driver murder

பழிக்கு பழியாக கார் டிரைவர் வெட்டிக்கொலை

பழிக்கு பழியாக கார் டிரைவர் வெட்டிக்கொலை
பாடியில் பழிக்கு பழியாக கார் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திரு.வி.க. நகர், 

சென்னை பாடி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 32). கார் டிரைவரான இவருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும், 2 குழந்தைளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்த கண்ணதாசனை அவரது பெரியப்பா மகன் குமார் (36) என்பவர் அருகில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது, பாடி புதுநகர் 2-வது தெருவில் இருவரும் மது அருந்தி கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்ணதாசனை கத்தியால் சராமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.

இதில் பலத்த காயமடைந்த கண்ணதாசன் சம்பவ இடத்தலே உயிர் இழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெ.ஜெ. நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பழிக்கு பழியாக...

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 2019-ம் ஆண்டு அழகு சுந்தரம் என்பவர் கொலைக்கு பழிக்கு பழியாக பிரகதீஷ் என்பவரை கடந்த ஜனவரி மாதம் கொலை செய்தனர். தற்போது பிரகதீஷ் கொலைக்கு பழிவாங்கும் விதமாக கண்ணதாசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் ஜவஹர், திருமங்கலம் உதவி கமிஷனர் சிவக்குமார் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்மில்லர் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 3 பேர் மாதவரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்து உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

ஆட்டோ டிரைவர்

சென்னை திருவல்லிக்கேணி வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் நவீன் என்கிற வினோத் (வயது 25). கடந்த 23-ந்தேதியன்று இரவு ஆட்டோ டிரைவர் நவீன், அதே பகுதியில் தனது ஆட்டோவில் குடிபோதையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் பிரகாஷ் என்கிற (28) கார்த்திக் (27), பழனி (45) ஆகியோர் சேர்ந்து நவீனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். நவீன் அந்த பகுதியில் தாதா போல் வலம்வந்தது அவரது நண்பர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை அரிவாளால் வெட்டி சாய்த்தனர்.

பலத்த காயமடைந்த நவீன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று அவர் பரிதாபமாக இறந்துபோனார். ஐஸ்அவுஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொலைவழக்கு பதிவுசெய்து பிரகாஷ், கார்த்திக், பழனி ஆகிய 3 பேரும் கைது செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரத்தில் வீட்டுக்குள் வெடிகுண்டு வீசி ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை
காஞ்சீபுரத்தில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு வீசி ஆட்டோ டிைரவரை வெட்டிக்கொன்று விட்டு தப்பிச் சென்றனர்.
2. வீட்டுக்குள் வெடிகுண்டு வீசி ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை தம்பிக்கு வைத்த குறியில் அண்ணன் கொல்லப்பட்டார்
காஞ்சீபுரத்தில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு வீசி ஆட்டோ டிரைவரை வெட்டிக்கொன்று விட்டு தப்பிச் சென்றனர்.
3. இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை முதல் கணவர் வெறிச்செயல்
இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது முதல் கணவரை போலீசார் கைது செய்தனர்.
4. கள்ளக்காதலி வீட்டில் வக்கீல் வெட்டிக்கொலை தடுத்த காதலிக்கும் சரமாரி வெட்டு
கள்ளக்காதல் தகராறில் வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தடுத்த கள்ளக்காதலிக்கும் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக கள்ளக்காதலியின் பெற்றோர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. குரோம்பேட்டையில் அரிசி கடை உரிமையாளர் வெட்டிக்கொலை
அரிசி கடை உரிமையாளர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குரோம்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.