சென்னையில் கோடை வெயில்; வெள்ளரி விற்பனை ‘ஜோர்’
சென்னையில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பாதசாரிகளும் தவித்து போகிறார்கள்.
கோடை வெயில் காரணமாக நகரின் பல இடங்களில் உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி பிஞ்சுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ வெள்ளரி ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை ஆகிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் வெள்ளரி பிஞ்சுகளை வாங்கி செல்கிறார்கள். அதேபோல கிர்ணி, பப்பாளி, தர்பூசணி உள்ளிட்ட குளிர்ச்சியூட்டும் பழங்களும் அதிகம் விற்பனை ஆகின்றன. இதனால் நகரின் சாலையோரங்களில் புற்றீசல் போல ஜூஸ் கடைகளும், பழச்சாறு கடைகளும் முளைத்து வருகின்றன.
மேலும் பதனீர்-நுங்கு விற்பனையும் களைகட்டி வருகிறது. வீடுகளில் நுங்கு கொண்டு ஜூஸ் போட்டும் மக்கள் குடித்து வருகிறார்கள். கோடை வெயிலை சமாளிக்க உடலுக்கு குளிர்ச்சியூட்டும் உணவுகளை பொதுமக்கள் தேடித்தேடி வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story