300 பேர் பங்கேற்ற திருமண விழா மணமகளின் தந்தைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
மராட்டியத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
லாத்தூர்,
இதில் திருமண விழாக்களில் 25 பேர்களுக்கு மேல் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் லாத்தூர் மாவட்டத்தில் தேவ்னி தாலுகா தலேகாவ் பகுதியில் ராம்கோவிந்த் பிராதர் என்பவரின் மகளின் திருமண விழா நடந்தது. இதில் கட்டுப்பாடுகளை மீறி அதிகளவில் கலந்து இருந்தனர்.
இது பற்றி அறிந்த தாலுகா உதவி தாசில்தார் விலாஸ் தாரங்கே, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி மனோஜ் ராவுத் அங்கு சென்று விசாரித்தனர். இதில் 250 முதல் 300 பேர் வரை வளாகத்தில் கூடி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருமண விழாவிற்கு ஏற்பாடு செய்த மணமகளின் தந்தைக்கு கொரோனா சட்டவிதிகளை மீறி செயல்பட்டதாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story