மாவட்ட செய்திகள்

பெங்களூரு, பெலகாவியில் தற்காலிக மயானங்களில் உடல்கள் தகனம் + "||" + TEMPORARY CREMATION CENTRES

பெங்களூரு, பெலகாவியில் தற்காலிக மயானங்களில் உடல்கள் தகனம்

பெங்களூரு, பெலகாவியில் தற்காலிக மயானங்களில் உடல்கள் தகனம்
பெங்களூரு, பெலகாவியில் தற்காலிக மயானங்களில் கொரோனாவுக்கு பலியானவர்கள் உடல்கள் தகனம் செய்யப்பட்டது.
பெங்களூரு: பெங்களூரு, பெலகாவியில் தற்காலிக மயானங்களில் கொரோனாவுக்கு பலியானவர்கள் உடல்கள் தகனம் செய்யப்பட்டது.

காத்து கிடக்கும் அலவம் 

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. புதிதாக வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்படுவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைப்பது இல்லை.

 அதுபோல உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. அதாவது கொரோனாவுக்கு இறப்பவர்களின் உடல்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அடக்கம் செய்யப்படுவதால், ஒரு உடலை அடக்கம் செய்ய குறைந்தது ½ மணி நேரமாவது ஆகிறது. 

இதனால் மின்மயானங்கள் முன்பு கொரோனாவுக்கு இறறந்தவர்களின் உடல்களை தாங்கி கொண்டு ஆம்புலன்சுகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக பெங்களூருவில் உள்ள மேடி அக்ரஹாரா, சும்மனஹள்ளி, பீனியா உள்பட 7 மின்மயானங்கள் முன்பும் ஆம்புலன்சுகள் அணிவகுத்து நின்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகின. மேலும் கொரோனாவுக்கு இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய உறவினர்கள் காத்து கிடக்கும் அவலமும் நடந்தன. 

ஒரே நேரத்தில் தகனம் 

இதனால் பெங்களூரு உள்பட சில பகுதிகளில் தற்காலிக மயானங்கள் அமைத்து கொரோனாவுக்கு உயிரிழப்பவர்கள் உடல்களை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பெங்களூரு அருகே தாவரகெரே பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டு தற்காலிக மயானம் அமைக்கப்பட்டது. 

அதுபோல பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே கிட்டேனஹள்ளி, பெலகாவி ஆகிய பகுதிகளில் தற்காலிக மயானங்கள் அமைக்கப்பட்டன. அந்த மயானங்களில் நேற்று முதல் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. 

தாவரகெரே மயானத்தில் 26 உடல்களும், கிட்டேனஹள்ளியில் 5 உடல்களும், பெலகாவியில் 7 உடல்களும் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் மேலும் 36 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
பெங்களூருவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 946 ஆக உயர்ந்துள்ளது.
2. பெங்களூருவில் உள்ள ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடல் - தென்மேற்கு ரெயில்வே தகவல்
பெங்களூருவில் ஊரடங்கு காரணமாக 14 நாட்கள் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடப்படும் என தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
3. பெங்களூருவில் கொரோனா சிகிச்சைக்காக 28 சட்டசபை தொகுதிகளுக்கு தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெங்களூருவில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4. பெங்களூருவில் வார இறுதி நாட்களில் 8 ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடல் - தென்மேற்கு ரெயில்வே தகவல்
வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு காரணமாக பெங்களூருவில் 8 ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடப்படும் என தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
5. பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் 240 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு
பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இதுவரை 240 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.