ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இரவு நேர ஊரடங்கை மீறிய 900 பேர் மீது வழக்கு பதிவு


ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இரவு நேர ஊரடங்கை மீறிய 900 பேர் மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 30 April 2021 10:36 PM GMT (Updated: 30 April 2021 10:36 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இரவு நேர ஊரடங்கை மீறிய 900 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இரவு நேர ஊரடங்கை மீறிய 900 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 
இரவு நேர ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-ம் அலை மிகவும் தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் உள்ளது. இரவு நேர ஊரடங்கின் போது மாவட்டத்தில் உள்ள 14 சோதனை சாவடிகள் மற்றும் 34 முக்கிய இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு ரோந்து செல்கின்றனர். அப்போது விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
900 பேர் மீது வழக்கு
குறிப்பாக இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் சுற்றும் நபர்கள் மீதும், இரவு 10 மணிக்கு மேல் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் இரவு தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்கள் மற்றும் 10 மணிக்கு மேல் கடையை திறந்து வைத்தவர்கள் என மொத்தம் 125 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஊரடங்கு உத்தரவை மீறிய 900-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story