மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் கொரோனா நடமாடும் தடுப்பூசி சிறப்பு முகாம்; நகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு + "||" + Corona Mobile Vaccination Special Camp in Tiruvallur Municipal Areas; Inspection in person by the Municipal Commissioner

திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் கொரோனா நடமாடும் தடுப்பூசி சிறப்பு முகாம்; நகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் கொரோனா நடமாடும் தடுப்பூசி சிறப்பு முகாம்; நகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், நகர் பகுதிகள் போன்ற பகுதிகளில் நடமாடும் தடுப்பூசி சிறப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஐ.ஆர்.என். அவென்யூ, எம்.ஜி.ஆர்.நகர், ஜட்ஜஸ் காலனி, ஆசூரி தெரு, வரதராஜபுரம், என்.ஜி.ஓ. காலனி, வி.எம்.நகர், ஜெயா நகர் போன்ற பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடமாடும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் ஆங்காங்கே நடத்தப்பட்ட முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இப்பணியினை திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 


தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 905 பேர் பாதிப்பு; 7 பேர் உயிரிழந்தனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொடர் அதிகரிப்பால், கொரோனா தொற்றுக்கு நேற்று 905 பேர் பாதிக்கப்பட்டனர்.
2. கொரோனாவில் இருந்து தப்பிக்க பூஜா ஹெக்டே யோசனை
தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே, தற்போது விஜய் ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
3. பிரபல இந்தி நடிகர் ரன்தீர் கபூருக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆயிரக்கணக்கான உயிர்ப்பலிகளும் நடக்கின்றன. நடிகர், நடிகைகளும் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள்.
4. கொரோனா பரவல் சூழலில் நாளை ஓட்டு எண்ணிக்கை: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு வாக்கு எண்ணும் மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
கொரோனா பரவல் சூழலில் தமிழக சட்டமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
5. கொரோனா அச்சம் காரணமாக ஆவடி போலீஸ் நிலையத்தில் மரத்தடியில் விசாரணை
கொரோனா 2-வது அலை காரணமாக சென்னை மாநகர போலீசில் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை