திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 905 பேர் பாதிப்பு; 7 பேர் உயிரிழந்தனர்


திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 905 பேர் பாதிப்பு; 7 பேர் உயிரிழந்தனர்
x
தினத்தந்தி 1 May 2021 11:08 AM IST (Updated: 1 May 2021 11:08 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொடர் அதிகரிப்பால், கொரோனா தொற்றுக்கு நேற்று 905 பேர் பாதிக்கப்பட்டனர்.

905 பேருக்கு கொரோனா

கொரோனா வைரசின் 2-வது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, கோவைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த 10 நாட்களாக 600-க்கும் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 905 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

7 பேர் பலி

இதுவரையில் மாவட்டம் முழுவதும் 59 ஆயிரத்து 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 53 ஆயிரத்து 345 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 5 ஆயிரத்து 564 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 7 பேர் இறந்து உள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 793 ஆக உயர்ந்துள்ளது.


Next Story