தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா


தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 May 2021 8:41 PM IST (Updated: 1 May 2021 8:41 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தேனி :
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 363 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் இது புதிய உச்சம் ஆகும். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 560 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 202 பேர் நேற்று ஒரே நாளில் குணமாகினர். இதுவரை இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து 18 ஆயிரத்து 586 பேர் மீண்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 1,759 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது மக்களிடம் அச்சத்தை அதிகரித்துள்ளது.

Next Story