பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் மதுவிற்ற 2 பேர் கைது


பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் மதுவிற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2021 10:51 PM IST (Updated: 1 May 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி

தொழிலாளர் தினத்தையொட்டி நேற்றும், முழு ஊரடங்கையொட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மதுக்கடைகள் மூடப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவே மது பிரியர்கள் ஆர்வத்துடன் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

 இந்த நிலையில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதை பயன்படுத்தி பொள்ளாச்சி அருகே சிலர் பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக கோமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 அப்போது திப்பம்பட்டி பூங்கா நகரில் ஏரிப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மதுவிற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

நெகமத்தை அடுத்த ரங்கம்புதூர் செல்லும் சாலை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக நெகமம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இந்த தகவலின் பேரில் நெகமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 41) என்பதும், பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, 220 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story