கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய மருந்து கடைக்கு ‘சீல்’
கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய மருந்து கடைக்கு ‘சீல்’
குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை பகுதியை சேர்ந்த 23 வயது கர்ப்பிணிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் கலெக்டருக்கு புகார் அனுப்பப்பட்டது. இதையடுத்து கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கப்பட்டது குறித்து விசாரிக்க வருவாயத்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் உபதலையில் உள்ள ஒரு மருந்து கடையில் இருந்து கருக்கலைப்பு மாத்திரையை வாங்கி செவிலியர் ஒருவர் அந்த இளம்பெண்ணுக்கு கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த மருந்து கடைக்கு வருவாய்த்துறையினர் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story