காஞ்சீபுரம் அருகே மது பாட்டில்கள் விற்ற 5 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே மது பாட்டில்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த வெள்ளைகேட், ஈஞ்சம்பாக்கம், வேளியூர் சுடுகாடு, கோனேரிகுப்பம் ரெயில்வேகேட் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலைக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி அவரது மேற்பார்வையில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் அந்ததந்த பகுதிகளுக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
அதையொட்டி செட்டியார்பேட்டையை சேர்ந்த அரவிந்த் (வயது 24), ஏரிவாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார் (24), காரப்பேட்டையை சேர்ந்த சதீஷ் (30), வேளியூரை சேர்ந்த தணிகாச்சலம் (38), கோனேரி குப்பத்தை சேர்ந்த சரசு என்கிற பொம்மி (42) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.
Related Tags :
Next Story