திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் இரவு நேர ரெயில் சேவையை தொடங்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை
திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் இரவு நேர ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்,
இது குறித்து திருவாரூர் மாவட்ட ெரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவல்
கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதனால் இரவு நேர பஸ் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு நேர சிறப்பு ரெயில்
அவசர தேவைக்காக அருகில் உள்ள ஊர்களுக்கு கூட செல்ல முடியாத நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே தென்னக ரெயில்வே திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி மார்க்கத்தில் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் சென்னையிலிருந்து ராமேசுவரம், காரைக்குடி இரவு நேர சிறப்பு ரெயில் சேவை தொடங்க வேண்டும். இதைப்போல சென்னையில் இருந்து ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலை மயிலாடுதுறை திருவாரூர், தஞ்சை வழியாக திருச்சிக்கு இயக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story