மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா + "||" + Corona

ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் ஒருவர் பலியானார்.
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.நேற்று மாவட்டத்தில் பரவலாக சிவகங்கை,சிங்கம்புணரி,தேவகோட்டை, காரைக்குடி ,திருப்பத்தூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 764 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 86 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மேலும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 880 பேருக்கு நோய் தொற்று; 7 பேர் உயிரிழப்பு
மதுரையில் நேற்று புதிய உச்சமாக 880 பேர் பாதிக்கப்பட்டனர். இதுபோல், ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர்.
2. இதுவரை 14,346 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது
தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 14 ஆயிரத்து 346 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 20 ஆயிரத்து 768 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. அரியலூரில் ஒரே நாளில் 60 பேர் கொரோனாவால் பாதிப்பு
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 60 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
4. பெரம்பலூரில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
5. முழு ஊரடங்கு காரணமாக மாநிலம் முழுவதும் கடைகள் அடைப்பு, சாலைகள் மூடப்பட்டன
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் மூடப்பட்டன. கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. சாலைகளில் தேவையில்லாமல் ஊர் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.