மாவட்ட செய்திகள்

பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணி வெற்றி-தர்மபுரியையும் பா.ம.க. கைப்பற்றியது + "||" + GK Mani wins Dharmapuri in Pennagaram constituency Captured

பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணி வெற்றி-தர்மபுரியையும் பா.ம.க. கைப்பற்றியது

பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணி வெற்றி-தர்மபுரியையும் பா.ம.க. கைப்பற்றியது
பென்னாகரம், தர்மபுரி தொகுதிகளில் பா.ம.க. வேட்பாளர்கள் ஜி.கே.மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளையும் தி.மு.க.விடம் இருந்து பா.ம.க. கைப்பற்றி உள்ளது.
தர்மபுரி:
பென்னாகரம், தர்மபுரி தொகுதிகளில் பா.ம.க. வேட்பாளர்கள் ஜி.கே.மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளையும் தி.மு.க.விடம் இருந்து பா.ம.க. கைப்பற்றி  உள்ளது.
பென்னாகரம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில், பா.ம.க. சார்பில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் ஜி.கே.மணி ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 123 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ. 84 ஆயிரத்து 937 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் 21 ஆயிரத்து 186 வாக்குகள் அதிகம் பெற்று ஜி.கே.மணி வெற்றி பெற்றதுடன், தி.மு.க. வசம் இருந்த இந்த தொகுதியையும் பா.ம.க. கைப்பற்றி உள்ளது.
இந்த தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்-2,46,525
பதிவான வாக்குகள்-2,10,305
ஜி.கே.மணி (பா.ம.க.) -1,06,123
பி.என்.பி.இன்பசேகரன் (தி.மு.க.) -84,937
உதயகுமார் (தே.மு.தி.க.) -2,921
ஷகிலா (மக்கள் நீதி மய்யம்) -1,471
தமிழழகன் (நாம் தமிழர் கட்சி) -8,945
நோட்டா வாக்குகள்-1,759
இந்த தொகுதியில் பெறப்பட்ட தபால் வாக்குகளில் 437 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் தணிகாசலம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
தர்மபுரி தொகுதி
தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் 1 லட்சத்து 5 ஆயிரத்து 630 பெற்றார். இவர் 26 ஆயிரத்து 860 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் தடங்கம் சுப்பிரமணி 78 ஆயிரத்து 770 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் தர்மபுரி தொகுதியை தி.மு.க.விடம் இருந்து பா.ம.க. கைப்பற்றி  உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்-2,46,525
பதிவான வாக்குகள்-2,17,333
எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (பா.ம.க.) -1,05,630
தடங்கம் சுப்பிரமணி (தி.மு.க.) -78,770
டி.கே.ராஜேந்திரன் (அ.ம.மு.க.) -11,226
ஜெயவெங்கடேசன் (மக்கள் நீதி மய்யம்) -5,083
செந்தில்குமார் (நாம் தமிழர் கட்சி) -8,700
நோட்டா வாக்குகள்-1,726
இந்த தொகுதியில் பெறப்பட்ட தபால் வாக்குகளில் 546 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்ற பா.ம.க. வேட்பாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதாப் சான்றிதழை வழங்கினார்.