சாலைகள் வெறிச்சோடியிருந்தன.
உடுமலையில், முழு ஊரடங்கையொட்டி மத்திய பஸ்நிலையம் மற்றும் சாலைகள் வெறிச்சோடியிருந்தன.
உடுமலை
உடுமலையில் முழு ஊரடங்கையொட்டி மத்திய பஸ்நிலையம் மற்றும் சாலைகள் வெறிச்சோடியிருந்தன.
முழு ஊரடங்கு
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும்போது கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலின் 2வது அலையின் வேகம் அதிகரித்துள்ளதைத்தொடர்ந்து அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதன்படி ஞாயிற்றுக்கிழமை நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகள் வெறிச்சோடின
அதன்படி உடுமலையில்நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் லாரி வேன் கார் ஆட்டோ ஆகியவை ஓடவில்லை. சில நேரங்களில் ஒன்றிரண்டு லாரிகள் ஒன்றிரண்டுதனியார் கார்கள் மட்டும் ஓடின.ஆங்காங்குள்ளமருந்து கடைகள் மற்றும் பால் கடைகள் மட்டும் திறந்திருந்தன.மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பஸ் லாரி வேன் கார் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடாததால் உடுமலையில் மத்திய பஸ்நிலையம் பகுதிமற்றும்பொள்ளாச்சிஉடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலை திருப்பூர் சாலை தாராபுரம் சாலை தளி சாலை கொழுமம் சாலை உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலைகளும் வெறிச்சோடி கிடந்தன.
சந்தை
உடுமலை ராஜேந்திரா சாலையில் வாழைத்தார் கடைகள் மளிகை கடைகள் உள்ளன.அத்துடன்ஆட்டிறைச்சி கடைகள் கோழிக்கடைகள், மீன் கடைகள் ஆகியவை அதிகம் உள்ளன.முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் இந்த சாலையும் வெறிச்சோடி காணப்பட்டது.
அத்துடன்ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி வாரச்சந்தையின் ஒரு பகுதியில் இயங்கும் தினசரி காய்கறி சந்தை மற்றும் காய்கறி கமிஷன் மண்டி ஆகியவை அடைக்கப்பட்டு இந்த வளாகத்தின் நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்தது.
உடுமலை கபூர்கான் வீதியில் உழவர்சந்தை உள்ளது. இந்த உழவர்சந்தைக்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.அதனால் காலையில் இந்த உழவர்சந்தைக்கு பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள். அத்துடன் உழவர்சந்தைக்கு வெளிப்பகுதியிலும் திறந்த வெளியில் தற்காலிக நடைபாதை கடைகள் அமைக்கப்படும்.அதனால் உழவர்சந்தை பகுதியில்எப்போதும் காலைநேரத்தில் கூட்டம் இருக்கும். ஆனால் முழு ஊரடங்குக்காக உழவர்சந்தைக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் அந்த பகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
உடுமலையில் போலீஸ் அதிகாரிகள் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மத்திய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம் பொள்ளாச்சி சாலைதிருப்பூர்சாலை சந்திப்பு, தளிசாலைபொள்ளாச்சி சாலை சந்திப்பில் உள்ள சிக்னல்பகுதி, ரெயில் நிலையம்பகுதி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
Related Tags :
Next Story