முழு ஊரடங்கு காரணமாக கரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு


முழு ஊரடங்கு காரணமாக கரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 2 May 2021 9:29 PM GMT (Updated: 2 May 2021 9:29 PM GMT)

முழு ஊரடங்கு காரணமாக கரூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.

கரூர்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை தடுக்கும் பொருட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதியிலிருந்து இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று கரூர் மற்றும் மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள், சரக்கு வேன்கள், லாரிகள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் என எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் கரூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பஸ் நிலையம், ஜவஹர் பஜார், கோவை சாலை, பிரதட்சணம் சாலை, காமராஜ் மார்க்கெட் என முக்கிய இடங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின.  ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கிய பொதுமக்கள் தேர்தல் முடிவுகளை டி.வி. மற்றும் தங்களது செல்போன்களில் ஆர்வமுடன் பார்த்தனர். ஆனால் தங்களது தொகுதி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை தெருவுக்கு வந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட முடியாமல் தவித்தனர்.


Next Story