தாம்பரம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு


தாம்பரம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 4 May 2021 4:32 PM IST (Updated: 4 May 2021 4:32 PM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் அருகே பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றர்.

தாம்பரம், 

சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர், சத்தியமூர்த்தி சாலையை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி காயத்ரி (36). இவர், நேற்று மதியம் அவரது வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் காயத்ரி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர். இது குறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story