காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் தடுப்பூசி சிறப்பு முகாம் அதிகரிப்பு அதிகாரி தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் தடுப்பூசி சிறப்பு முகாம் அதிகரிப்பு அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 5 May 2021 10:02 AM IST (Updated: 5 May 2021 10:02 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் தடுப்பூசி சிறப்பு முகாம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம், 

சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தொற்று 2- வது அலை தமிழ்நாட்டில் தீவிரமாக பரவி வருகிறது. தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாவட்டத்திலுள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், காஞ்சீபுரம் பெருநகராட்சி பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலமாக இதுவரை மாவட்டம் முழுவதுமாக 68 ஆயிரத்து 581 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மாவட்டத்தில் 20 இடங்களில் நடைபெற்று வந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமானது தற்போது 40 முகாம்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story