பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 May 2021 5:16 PM GMT (Updated: 6 May 2021 5:16 PM GMT)

பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சாயல்குடி, 
மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.க. அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளை தாக்கியதை கண்டித்து சாயல்குடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச்செயலாளர் ராஜசேகர பாண்டியன், நிர்வாகிகள் முருகேசன், புவனேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மேற்கு வங்காள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் தங்கமாணிக்கம், மகாலிங்கம், குமரேசன், சந்திரசேகர், குருசாமி, ஓ.பி.சி. அணி செந்தில் நாகராஜன், மாரிமுத்து, பால்ராஜ் கார்த்திக் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story