மத்தூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது


மத்தூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 6 May 2021 6:01 PM GMT (Updated: 2021-05-06T23:41:47+05:30)

மத்தூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது.

மத்தூர்,

மத்தூர் போலீசார் கூச்சூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு புதியதாக கட்டப்பட்டு வரும் கோவில் வளாகத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 40), சின்னசாமி (54), மகேந்திரன் (57), புலியூர் மாரியப்பன் (51), பெருமாள்குப்பம் செல்வம் (40) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,370 பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story