மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் காயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் காயம்
x
தினத்தந்தி 6 May 2021 6:43 PM GMT (Updated: 2021-05-07T00:13:12+05:30)

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர்காயம் அடைந்தனர்.

குளித்தலை
குளித்தலை அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (31). இவர் குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு பகுதியை சேர்ந்த ஜீவா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். குளித்தலை அருகே பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். அப்போது அதே சாலையில் பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் காயம் அடைந்தனர்.  இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story